பழநியில் 150 கிலோ காய்களில் சித்ரகுப்தருக்கு பூஜை!
ADDED :4169 days ago
பழநி : மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை, எழுதிவரும், சித்ரகுப்தர், சித்ரா பவுர்ணமி அன்று, அவதரித்தார். அவருக்கு அந்தநாளில், சிறப்பு பூஜைகள் செய்து, ஆண்டுதோறும் வழிபடுகின்றனர். நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பழநி ஆவணி மூல வீதியுள்ள தனியார் மடத்தில், சிவசுப்ரமணியன் வகையறாவினர். 150 கிலோ எடையளவில், ஆப்பிள், ஆரஞ்சு உட்பட பலவகை பழங்கள், கத்திரிக்காய், வெள்ளரிக்காய், வாழைக்காய் ஆகிய காய்கறிகள்,பனைநுங்கு ஆகியவற்றை படையலாக படைத்திருந்தனர்.சிவசுப்ரமணியன் கூறுகையில்," ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று, சித்ரகுப்தரை வழிபட்டால், நமது ஆயுள் அதிகரிக்கும். அதன்படி, பல்வேறுவகையான பழங்கள், காய்கறிகள் படை த்து, சித்ரகுப்தர் அவதரித்தக்கதையை ஓலைச்சுவடி வைத்து படித்து, பூஜைகள் செய்துவழிபடுகிறோம், என்றார்.