உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சித்ரா பவுர்ணமி திருவிழா!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சித்ரா பவுர்ணமி திருவிழா!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் முகவை ஊரணி மேல்கரை ராஜகாளி அம்மன் கோயிலில் 17ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா மே 10ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. சித்ரா பவுணர்மியை முன்னிட்டு நேற்று காலை பொங்கலிட்டு அம்மனுக்கு மகாபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை ராஜகாளி அம்மன் சர்வ அலங்காரத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டு நொச்சிவயல் ஊரணி சென்று பால்குடம், அக்னி சட்டிகள் எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. மண்டபம் முகாம் பூந்தோண்டி காளியம்மன் கோயில், கருப்பண சுவாமி கோயில், தர்ம முனீஸ்வரர் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா மே 4ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதைமுன்னிட்டு சுவாமிக்கு தினமும் இரு வேளை சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்ரா பவுணர்மி நாளான நேற்று காலை பக்தர்கள் கடற்கரை சென்று தீர்த்தம் எடுத்து கோயிலை அடைந்தனர். இதன்பின் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்றனர். இன்று காலை (மே 15) மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் செய்தனர். பிரப்பன்வலசை ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் வண்ண பாராயணம், தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. வாலாந்தரவை அருகே அலம் கோவிந்தசாமி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கண்ணாரேந்தல் கருப்பன் கோயிலில் சித்திரை விழா மே 7ல், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வங்காள விரிகுடா முள்ளிமனை கடலில் பக்தர்கள் நீராடி 4 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலின் முன்பு காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நந்தன கோபாலகிருஷ்னர் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடந்தன. பின்பு நதிபாலத்தில் நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராமளானோர் பங்கேற்றனர். தேவிபட்டினம் அருகே உள்ள பொட்டகவயல் முனியய்யா கோயில், கலையனூர் முனியய்யா கோயில் ஆகிய இடங்களில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.

சாயல்குடி: சிக்கல் அருகே ராஜாக்கள் பாளையம் தர்மமுனீஸ்வரர், முத்துராகவம்மாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதையொட்டி, காப்ப கட்டி விரமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, கிராம தலைவர் சேதுராஜ், செயலர்கள் முனியராஜ், வெங்கடசாமி, கோபால்ராஜ் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

உச்சிப்புளி: மண்டபம் யூனியன் அழகன்குளம் ஊராட்சிக்குட்பட்ட சந்தானகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று சுவாமி சர்வ அலங்காரத்தில், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் "கோவிந்தா கோஷத்தில் புடைசூழ வைகையாற்றில் எழுந்தருளினார். திராளன பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாட்டை அறங்காவலர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !