வெங்கடேச பெருமாள் சன்னதியில் சிலை பிரதிஷ்டை!
ADDED :4167 days ago
செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு அருணாசல ஈஸ்வரர் கோவிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்துள்ளனர். புதிதாக அமைத்துள்ள வெங்கடேச பெருமாள் சன்னதியில் நேற்று வெங்கடேச பெருமாள் சிலை பிரதிஷ்டை நடந்தது. 2012ம் ஆண்டு மகாபலிபுரத்தில் இருந்து வாங்கி வந்த 8 அடி 3 அங்குலம் உயரமுள்ள வெங்கடேச பெருமாள் சிலையை தானிய வாசத்திலும், ஜலவாசத்திலும் வைத்திருந்தனர். நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சிலையை பிரதிஷ்டை செய்யும் பணி நடந்தது.