பெரியாண்டிக்குழியில் தேர்த்திருவிழா!
ADDED :4167 days ago
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 51வது ஆண்டு தேர் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், ஒவ்வொறு வருடமும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேர் இழுத்தல் மற்றும் செடல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்த வருடம் 51 வது ஆண்டு உற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய விழாவான நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பால்குடம் எடுத்தல், தேர் இழுத்தல், செடல் போட்டு கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.