உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் முத்தாலம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

பாகூர் முத்தாலம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

பாகூர்: பாகூர் முத்தாலம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு விளக்கு பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி, உலக நன்மை பெறவும், அக்னி நட்சத்திர வெப்பத்தை குறைக்க வேண்டியும், அம்மனை வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !