கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை விழா:
ADDED :4163 days ago
கோவில்பட்டி ;கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5–ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.விழா நாட்களில் இரவில் அம்மன் வீதி உலா , பால்குடம் ஊர்வலம் , மாவிளக்கு , அக்னி சட்டிகளை ஏந்தி வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலையில் 300–க்கும் மேற்பட்ட பெண்கள், கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.