பாஞ்சாலியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு
ADDED :4160 days ago
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த தவணி கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 4–ம் தேதி தொடங்கி நடந்தது வருகிறது. விழா முக்கிய நிகழ்ச்சியாக தபசு நிகழ்சியில் 45 அடி உயர பனை மரத்தில் சிவன் பார்வதியிடம் வரம் கேட்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் வரம் கேட்டு வழிபட்டனர். வரும் 21–ம் தேதி காலையில் 60 அடி அளவில் துரியோத னன் உருவம் களிமண்ணால் அமைத்து படுகளம் நடக்கிறது. மாலையில் தீ மிதி விழா நடக்கிறது.