உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்ச நேயர் கோவிலில் நேற்று வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.  இக் கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்ச நேயருக்கு  தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று  தமிழ்மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி,   சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள்  நடத்தப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !