தஞ்சை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிசேகம்
ADDED :4274 days ago
திருவோணம்: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் சித்தி விநாயகர் கோவிலில் சித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், துர்க்கைஅம்மன் மற்றும் நவக்கிரகங்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. விழாவில் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் கடம் புறப்பட்டு கோவிலின் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.