உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை விநாயகர் கோவிலில் சங்கடகரசதுர்த்தி வழிபாடு

நாகை விநாயகர் கோவிலில் சங்கடகரசதுர்த்தி வழிபாடு

ஆக்கூர்:  நாகை மாவட்டம்,  செம்பனார்கோவில்   மேலப்பாதியில் குபேரமங்கள விநாயகர் கோவில்   சங்கடகரசதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  ஊர் நன்மைக்காக நடந்த  கலசபூஜையில்  விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் , வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது.  .இதேபோல் கருவாழக்கரை மேலையூர் வெண்ணைலிங்க விநாயகர் கோவிலில் , மேலபெரும்பள்ளம் வலம்புரிவிநாயகர் கோவில், திருநகரி பொய்யாத விநாயகர் கோவில், கஞ்சாநகரம் கேசவவிநாயகர் கோவில், மடப்புரம் சிதம்பரவிநாயகர் கோவில், பரசலூர் தாதாவிநாயகர் கோவில், செம்பனார்கோவில் கற்பகவிநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !