அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4160 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை ஓராண்டு நிறைவு, உலக நன்மை, நீர்வளம் பெருக வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. சொர்ண ராஜ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண மடத்தின் உப தலைவர் ஸ்ரீமத் பரமானந்த மகராஜ், அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற பொறுப்பாளர் பிரேமா குழுவினர் முன்னிலையில் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டு குழுவினர், தலைவர் கருணாநிதி, பொருளாளர் மணிகண்டன், கோவிந்தராஜ், லட்சுமணன், சத்தியசீலன் செய்தனர்.