உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழா!

குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழா!

குளித்தலை: தோகைமலையில் நடந்த வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையில் பகவதிஅம்மன், மகா மாரியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் அக்கினி நட்சத்திரத்தை முன்னிட்டு வருடந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடந்த விழா வில் நேற்று முன்தினம் குளித்தலை காவேரியில் இருந்து தீர்த்தகுடம் கொண்டு வரப்பட்டது. பின்னர் பகவதி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடத்துடன் பால்குடம், தீ சட்டி, பால்காவடி, அலகு குத்துதல், பரவை காவடி மற்றும் கரும்பு தொட்டில்களுடன் பக்தர்கள் கடை வீதி, கருப்பசாமி கோயில் முக்கிய வீதிகளின் வழியாக வெள்ளபட்டி மகா மாரியம்மன் கோவில் சென்றனர். பிறகு அங்கு அமைக்கபட்டு இருந்த தீ குண்ட பூக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பிறகு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு தண்ணீர் பந்தல், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !