உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயண சிற்பங்கள் நிறைந்த தேரை புதுப்பித்து இயக்க கோரிக்கை!

ராமாயண சிற்பங்கள் நிறைந்த தேரை புதுப்பித்து இயக்க கோரிக்கை!

திருவாரூர்: நீடாமங்கலத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க சந்தான ராமர்கோவிலில் சிதில மடைந்த ராமாயண சிற்பங்கள் நிறைந்த தேரை புதுப்பித்து தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் ஒருவரான பிரதாப சிம் மன், மனைவி யமுனாம்பாள் வேண்டுதல் படி குழந்தை பாக்கியம் கிட் டிய தால்  1761ம் ஆண்டு நீடாமங்கலத்தில் சந்தான ராமருக்கு கோவில் கட்டினார். இக்கோவில் ஒன்று பட்ட தஞ்சை மாடத்தில் வரலாற்று சிறப்புகளில்  ஒன்றா கவும் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலில் சந்தானராமர், சீதை, லட்சுமுணர், அனுமன் அருள் பாலிக்கின்றனர்.  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரால் பாடல் பெற்ற  இக்கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் புத்திபாக் கியத் திற்கு வேண்டுதலுக்கு வந்து செல்கின்றனர்.  ராம நவமி பெருவிழாவின் 10ம் நாளில் தேரோட்டம் சிறப்பாக நடக்கும் இதில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வடம் பிடித்துதேரிழுத்தனர்.

தற்போதும் கோவில் முன் உள்ள குளத்தில் நீராடி சுவாமியை வணங்கி புத் திரம் பாக்கியம் பெற்றவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.  இக்கோ வில் தேரில் ராமாயண கதா பாத்திரத்தை விளக்கும் வகையில் பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது.  கோவில் தேர் பழுதடைந்ததால் தேரோட்டம் நடத்தாமல்  பல ஆண்டுக ளுக்கு முன்  கோவில் முன்புறம் உள்ள ஓரத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது வரை புதுப்பித்து இயக்காததால் தேர் சட்டங்கள் சேதடைந் துள் ளது. எனவே தேரை புதுப்பித்து தேரோட்டம் நடத்திடவும், வரலாற்று மர புகளை பாது காத் திடவும் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !