உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடுபட்டி கோயில்களில் பொங்கல் உற்சவம்!

காடுபட்டி கோயில்களில் பொங்கல் உற்சவம்!

காடுபட்டி : காடுபட்டி ராமலிங்கசவுடாம்பிகையம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் வைகாசி பொங்கல் திருவிழா இன்று முதல் 6 நாட்களுக்கு நடக்கின்றன. இன்றிரவு 9 மணிக்கு கரகம் எடுத்தல், முளைப்பாரி, மாவிலக்கு, அபிஷேகம், மே 21 காலை 8 மணிக்கு மண்ணாடிமங்கலம் வைகை ஆற்றில் கத்தி போடும் நிகழ்ச்சி, மே 22ல் காலை 9 மணிக்கு பொங்கல் படைத்தல், மதியம் 3 மணிக்கு அக்னிச்சட்டி, பால்குடம், மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மன் புறப்பாடு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தேவாங்கர் உறவின்முறை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !