ஐய்யனார் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்!
ADDED :4157 days ago
கடலூர் : கடலூர், புதுப்பாளையம் கல்யாண ஐய்யனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தில் ஐயனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு 18ம் தேதி காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை, மகா கணபதி ஹோமம், சாஸ்தா மூலமந்திர ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. 19ம் தேதி காலை 9:00 மணி முதல், 12:00 மணி வரை கரகம் எடுத்தல், விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்பு மாலை 3:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை ஊரணி பொங்கல் வைத்தல், திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது.