திருப்பூர் மாவட்டத்தில் 4 கோவில்களில் அன்னதான திட்டம்!
ADDED :4155 days ago
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், மேலும் நான்கு கோவில்களில், அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தற்போது 21 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், நல்லூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவில், முதலிபாளையம் ஆஞ்சநேயர் கோவில், மடவிளாகம் அங்காளம்மன் கோவில், வாமனஞ்சேரி வலுப்பூரம்மன் கோவில் ஆகியவற்றில் அன்னதான திட்டம் துவக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அன்னதான திட்டத்தை மேலும் நான்கு கோவில்களில் விரிவு படுத்தப்படுகிறது. மேலும் 10 கோவில் களின் பட்டியல் பரிசீலனையில் உள்ளது, என்றனர்.