திண்டிவனம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!
ADDED :4257 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன் தினம் கணபதி பூஜை, ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்தசங்கிரஹணம், கங்கை திரட்டல், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு கண் திறத்தல், அபிஷேகம், நவரத்தினம், யந்திரஸ்தாபனம், மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 9.45 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ சீனுவாச சாமி மற்றும் நாகராஜ் குருக்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து 10 மணிக்கு மூலவர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இரவு பூ அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.