மதுரை விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு!
ADDED :4254 days ago
மதுரை : நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால், மதுரை வடக்குமாசி - மேலமாசிவீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயிலில் இந்து இளைஞர் பேரவையினர் 108 தேங்காய் உடைத்தனர். அமைப்பாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் அசோக்குமார், பொதுச் செயலாளர் மணிமுத்து மற்றும் நிர்வாகிகள் வெங்கடேசன், கார்த்திக், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.