கலிக்கம்பட்டி சந்தன மாரியம்மன், பகவதியம்மன் கோயில் விழா!
ADDED :4157 days ago
கலிக்கம்பட்டி : ஆத்தூர் ஒன்றியம்,கலிக்கம்பட்டியில் காளியம்மன்,சந்தன மாரியம்மன், பகவதியம்மன் சாமிகும்பிடு விழா நடந்தது. பெட்டி அழைக்கப்பட்டு, கரகம் ஜோடிக்கப்பட்டு விழா துவங்கியது. மறுநாள் அதிகாலை வாணவேடிக்கையுடன் அம்மன் கரகம் ஊர்வலமாக வந்து சன்னதியை அடைந்தது. முளைப்பாரி அழைப்பிற்கு பிறகு மாவிளக்கு, பொங்கல் வைக்கப்பட்டது. தீச்சட்டி, பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்கள் செலுத்தப்பட்டன. நேற்று காலை பொங்கல் வைத்து,சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டிற்கு பிறகு கரகம் பூஞ்சோலை அடைந்ததுடன் சாமிகும்பிடு விழா நிறைவடைந்தது. விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.