வடபொன்பரப்பி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED :4254 days ago
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பி அம்சாரி அம்மன் சுவாமிக்கு மண்டல பூஜை நிறைவு விழா, அம்மனுக்கு கண் திறப்பு விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி சர்வோதயா பள்ளியின் எதிரே அமைந்துள்ள அம்சாரி அம்மன் சுவாமிக்கு புதிதாக கோவில்கள் கட்டி கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மண்டல பூஜை நடந்து முடிந்து. கடந்த 20ம் தேதி சுவாமிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர்கள் சம்ஷாத் பேகம் ஷாஜகான், பச்சமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.