காளியம்மன் கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்
மரக்காணம் : மரக்காணம் மகா காளியம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. மரக்காணம் மேல்நிலைபள்ளித் தெருவில் உள்ள மகா காளியம்மன் கும்பாபிஷேக விழா வரும் 31ம் தேதி துவங்குகிறது. ஜூன் 1ம் தேதி இரண்டாம் காலயாக பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு விமான கலசம், ஸ்வாமிகள் பிரதிஷ்டை, திரு மருந்து சாற்றுதல் நடக்கிறது.தொடர்ந்து 2ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள், காலை 9.10 மணிக்கு யாத்திராதான சங்கல்பம், கடம்புறப்பாடு, ஆலய வலம் நடக்கிறது. பின்னர் 9: 20 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலாலயம் மற்றும் பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 10: 20 மணிக்கு சர்வ ஆலைய மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா காளியம்மனுக்கு மகா தீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வெண்ணிலாகாளிமுத்து மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.