கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று திருத்தேர் ஊர்வலம்!
ADDED :4157 days ago
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, இன்று (26ம் தேதி) திருத் தேர் ஊர்வலம் நடக்கிறது.தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற, கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் மற்றும் திருவீதி உலா நடந்து வருகிறது. இன்று காலை, 7.05 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.