பாகூர் மூலநாதர் கோவிலில் ஐ.ஜி., சாமி தரிசனம்!
ADDED :4203 days ago
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி., பிரவிர் ரஞ்ஜன், சாமி தரிசனம் செய்தார். பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி., பிரவிர் ரஞ்ஜன் நேற்று காலை 11.45 மணிக்கு, சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.அறங்காவலர் குழு செயலாளர் கணேசன், ஐ.ஜி., பிரவிர் ரஞ்ஜனுக்கு வரவேற்பு அளித்தார்.தொடர்ந்து, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், பொங்கு சனி உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்து, கோவிலை வலம் வந்த, ஐ.ஜி., பிரவிர் ரஞ்ஜன், தல வரலாறு குறித்து அர்ச்சகர் சங்கர நாராயணணிடம் கேட்டறிந்தார்.12.45 மணிக்கு, சாமி தரிசனம் முடித்து, புறப்பட்டுச் சென்றார்.எஸ்.பி., தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப் இன்ஸ்பெக்டர் நியூட்டன் ஆகியோர் உடனிருந்தனர்.