உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் போகர் ஜெயந்தி விழா: மரகதலிங்க பூஜை!

பழநியில் போகர் ஜெயந்தி விழா: மரகதலிங்க பூஜை!

பழநி : பழநியில் போகர் ஜெயந்தியை முன்னிட்டு, மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பழநியில், நவபாஷன மூலிகைகளால், ஞானதண்டாயுதபாணி சுவாமி சிலையை வடிவமைத்த சித்தர் போகர், வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். நேற்று போகர் ஜெயந்தியை முன்னிட்டு, மலைக்கோயிலுள்ள போகர் சன்னதி, வாழைமரம், பூக்களால் அலங்கரிக்கபட்டிருந்தது. அபூர்வ பச்சை மரகத லிங்கத்திற்கு, பழங்கள், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான சோடஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின் மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது. பாதவிநாயகர் கோயில் அருகேயுள்ள புலிப்பாணி ஆசிரமம், போகர் ஜீவசமாதி ஆலயத்தில், அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, புலிப்பாணி பாத்திரசுவாமிகள், சரவணா அறக்கட்டளை சண்முகானந்தம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !