உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூன் 8ல் சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!

ஜூன் 8ல் சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!

அழகர்கோவில் : மதுரை சோலைமலை முருகன் கோயிலில் புதுப்பிக்கும் பணிகள் அனைத்தும் முடிந்ததால், ஜூன் 8ல் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2002ல் நடந்தது. இதைதொடர்ந்து, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் உபயதாரர்கள் கூட்டம் 2013 செப்டம்பரில் நடந்தது.கோயில் ராஜகோபுரம் புதுப்பித்தல், மேற்கூரைகள் வர்ணம் பூசுதல், 70 பிரகாரத் தூண்களில் சுவாமி சுதைகள் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.70 லட்சம் மதிப்பில் நடந்தது. கோயில் முகப்பில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகள், தெற்கு, வடக்கில் முருகனின் பல்வேறு அவதாரங்களை கூறும் வகையில் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வடக்கில் ரூ.1.25 கோடி மதிப்பில் சஷ்டி மண்டபம், தெற்கில் ரூ.50 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறை புதுப்பித்தல், வாகனங்கள் புதுப்பித்தல் போன்ற பணிகள் ரூ.20 லட்சத்திலும், ரூ.10 லட்சத்தில் மடப்பள்ளி, கருவறை கதவு, படிகள் வெள்ளியிலும், முன்னால் வெள்ளியினாலான துவாரபாலகர்கள் சிலைகள் அமைத்தல் என ரூ.5 கோடியில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.ஜூன் 8ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சஷ்டி மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது என கோயில் நிர்வாக அதிகாரி வரதராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !