திருப்பத்தூர் பூமாயி கோயிலில் பால்குட விழா!
ADDED :4153 days ago
திருப்பத்தூர்: பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று பால்குட விழா நடைபெற்றது. வசந்தப் பெருவிழாவானது மே 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. துவக்க நாள் முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாரதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.