திருச்செந்தூர் வைகாசி விசாகம்: ஜூன் 11ல் கோலாகலம்!
ADDED :4153 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 11ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் கோயிலில் 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.