உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன உரூஸ் விழா!

சந்தன உரூஸ் விழா!

திருப்புத்தூர் : திருப்புத்தூர் சமஸ்கான் பள்ளிவாசல் அருகே உள்ள யாகூப், சமஸ்பீர் வலியுல்லாக்களின் சந்தன உரூஸ் விழா நடந்தது. முதல் நாள் விழாவில் நினைவிடத்தில் பச்சை போர்வையால் மூடப்பட்டு, மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காலை முதல் துவா ஓதி முஸ்லிம்கள் வழிபாடு நடத்தினர். முஸ்லிம்கள் சந்தனக்குடம் எடுத்தனர். நேற்று அதிகாலை 1 மணிக்க, அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமாக சென்று, மீண்டும் பள்ளிவாசல் வந்தடைந்தது. அதை தொடர்ந்து, கந்தூரி எனப்படும் அன்னதானம் நடந்தது. சந்தனக்கூடு வலம் வரும்போது, பக்தர்கள் நேர்த்தியாக வாழைப்பழங்களை சூரை விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !