சிவன் கோவிலில் 108 கலச அபிஷேகம்!
ADDED :4147 days ago
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் அக்னி நட்சத்திரம் முடிந்ததையொட்டி 108 கலச அபிஷேகம் நடந்தது. சின்னசேலத்தில் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று அக்னி நட்சத்திர முடிவை முன்னிட்டு 108 கலசங்கள் வைத்து பூஜை செய்து, சிவனுக்கும் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காலை 8 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, ருத்ர பாராயணம் செய்து கலச அபிஷேகம் நடந்தது. மாலையில் மூலவருக்கு ராஜ அலங்காரமும், அம்மனுக்கு மூகாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அக்னி நட்சத்திரத்தால் ஏற்படும் வெப்பங்கள் குறைவதற்காகவும், வறட்சி நீங்கி மழை பெய்யவும் இந்த பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை வேத வெங்கடேஷ் குருக்களும், சந்திரமோகன் குருக்கள் ஆகியோர் செய்தனர்.