இருக்கன்குடி கோயிலில் மழைநீர் சேகரிப்பு பணி
சாத்தூர் : மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து கோயில்களிலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, இதை புகைப்படமாக அளிக்கவும், பணிகளை ஜூன் 30க்கு முன்பாக முடிக்கவும், அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், நேற்று மழைநீர் சேகரிப்பு திட்டகுழிகளை தோண்டி, சரிசெய்யும் பணிகள் துவங்கின. இந்து சமயஅறநிலையத்துறை செயல்அலுவலர் தனபாலன், பரம்பரைஅறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, இளநிலை பொறியாளர் சேவற்கொடியோன், மேற்பார்வையில், பணிகள் துவங்கப்பட்டன. ராமமூர்த்தி பூஜாரி கூறுகையில், ""இருக்கன்குடி கோயிலில், முன்பு ,மழைநீர் முழுவதுமாக கிணறு ஒன்றிற்கு, குழாய்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு சேகரிக்கப்பட்டது. குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வரின் உத்திரவுப்படி, கோயில் வளாக மண்டபங்கள், கட்டடங்கள் உள்ள இடத்தில், மழைநீர் சேகர குழி அமைக்கும் பணி, துவங்கப்பட்டுள்ளது,என்றார்.