உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகாச மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகல துவக்கம்!

ஆகாச மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகல துவக்கம்!

கும்பகோணம்: நாச்சியார்கோவில், ஆகாசமாரியம்மன் கோவிலில், காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இன்று, அம்பாள் ஆலயம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் இரவு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இன்று, (30ம் தேதி) இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருநரையூர் செங்கழுநீர் விநாயகர் கோயிலிருந்து, அம்பாள் ஆலயம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே, 31ம் தேதி அம்பாள் வீற்றிருந்த திருக்கோலம், பூச்சொரிதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 1ம் தேதி தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லெட்சுமி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சரஸ்வதி அலங்காரம், மதனகோபால அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயனம் போன்ற அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பார். ஜூன், 6ம் தேதி, அம்பாள் அந்தம் வரை வளர்ந்து, ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்துடன் சேவை ஸாதித்து, அருந்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11ம் தேதி இரவு, தேரில் அம்பாள் சமயபுரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா நாட்களில், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சீனிவாசன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !