கொல்லிமலை பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
சேந்தமங்கலம்: கொல்லிமலையில், ஜூன், 1ம் தேதி, பாலமுருகன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. கொல்லிமலை தாலுகா, வாழவந்திகோம்பை அடுத்த செம்மேட்டில், பாலமுருகன் சக பரிவார கோவில் மஹா கும்பாபிஷேக விழா, இன்று (30ம் தேதி) காலை, 7 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. காலை, 9 மணிக்கு, அரப்பள்ளீஸ்வர் கோவில் பஞ்ச நதியில் இருந்து, தீர்த்தக் குடம் எடுத்து வந்து, முளைப்பாலிகை அழைத்தல் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு, மங்கள வாத்தியம், விக்நேஸ்வர் பூஜை, புண்ணியாகம், பஞ்சகவ்யம், அனுக்ஞை, எஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி பிரவேஷபலி, சங்கரகர்ணம், அங்குரார்ப்பணம், ரஷ்ஷாபந்தனம், இரவு, 7 மணிக்கு, கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேஷம், இரவு, 8 மணிக்கு, முதற்கால பூஜை துவங்குகிறது. நாளை, 31ம் தேதி, காலை, 7 மணிக்கு, இரண்டாம் கால பூஜை துவக்கம், 11 மணிக்கு, பிம்ப சுத்தி, சைனாதிவாசம், கண் திறத்தல், கோபுர கலசம் வைத்தல், 12 மணிக்கு, எந்திர ஸ்தாபனம், நவரஞ்சன, பஞ்சலோக, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரவு, 7 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 1ம் தேதி, அதிகாலை, 4 மணிக்கு, மங்கள இசை, நான்காம் கால பூஜை, காலை, 6.30 மணிக்கு, மஹாதீபராதனை, 7.20 மணிக்கு, யாத்ரா தானம், சங்கல்பம் கடம் புறப்பாடு, 7.45 மணிக்கு, விமான மஹா கும்பாபிஷேகம், 8 மணிக்கு, மூலவருக்கு மஹா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு, பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.