விருதை கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4311 days ago
விருத்தாசலம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அமாவாசையையொட்டி, விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 28ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலை விநாயகர், அங்காள பரமேஸ்வரி, புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:30 மணியளவில் அம்மன் பல்லக்கில் உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.