செல்வ விநாயகர் கும்பாபிஷேக விழா
ADDED :4163 days ago
அவிநாசி : அவிநாசி - மங்கலம் ரோடு, காசிகவுண்டன்புதூர் கொடிகாத்த குமரன் நகரில் புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கோவிலருகே யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. காலை 6.00 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமை வகித்தார். வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காசிகவுண்டன்புதூர், கொடிகாத்த குமரன் நகரை சேர்ந்த பக்தர் கள் பங்கேற்றனர். விழாவை யொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.