அப்பர்சாமி மடத்தில் ஜோதி தரிசன வழிபாடு!
ADDED :4251 days ago
ஈரோடு: ஈரோடு, அப்பர்சாமி மடத்தில், இன்று வள்ளலார் ஜோதி தரிசன வழிபாடு நடக்கிறது. ஈரோடு, கோட்டை அனுமந்த ராயன் வீதியில் உள்ள, அப்பர்சாமி மடத்தில், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில், வள்ளலாரின் ஜோதி தரிசன வழிபாடு நடக்கிறது. இம்மாத பூச நட்சத்திர வழிபாடு, இன்று நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை, ஆறு மணி முதல், 7.30 மணி வரை அகவல் பாராயணமும், அதன் பின், ஆறு திரைகளை விலக்கி வள்ளலாரின் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. ஏற்பாடுகளை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர், செய்து வருகின்றனர்.