சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் தேரோட்டம்
ADDED :4149 days ago
நாகர்கோவில் : சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ம் நாள் விழாவான நேற்று காலை 11 மணிக்கு அய்யா பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளினார். 12 மணிக்கு பக்தர்கள் அய்யா சிவசிவ ஹரஹர கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பன்னீர், பூ, பழம் போன்றவை வழங்கி வழிப்பட்டனர். தொடர்ந்து அன்னதர்மம் நடைபெற்றது. விழாவில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது.