செங்கண்மாலீஸ்வரர் கோவில் பாலாலயம்
ADDED :4149 days ago
கேளம்பாக்கம் : செங்கண்மாலீஸ்வரர் கோவிலில், திருப்பணி துவங்குவதற்கான பாலாலயம் நேற்று நடந்தது.கேளம்பாக்கம் அடுத்த, தையுரில் விஜயநகர பேரரசு கால புகழ்பெற்ற பெரியநாயகி சமேத செங்கண்மாலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை தொடர்ந்து நேற்று திருப்பணி துவங்குவதற்கான பாலாலய பூஜை நடந்தது. கோவில் செயல் அலுவலர்வேதமூர்த்தி ஆய்வாளர் கருப்பையா உட்பட கிராமத்தினர் கலந்து கொண்டனர்.செயல் அலுவலர் வேதமூர்த்தி கூறுகையில், செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணி துவங்கப்பட்டுள்ளது, என்றார்.