உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலாத்ரி நரசிம்மபெருமாள் பிரம்மோற்சவம் துவக்கம்!

பாடலாத்ரி நரசிம்மபெருமாள் பிரம்மோற்சவம் துவக்கம்!

செங்கல்பட்டு : சிங்கப்பெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிங்கப்பெருமாள் கோவிலில், புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு இவ்விழா, நேற்று காலை 6:45 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், முக்கிய உற்சவமான கருடசேவை 4ம் தேதியும், திருத்தேர் உற்சவம், 8ம் தேதியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !