இடையன்சாவடியில் தீமிதி விழா
ADDED :4146 days ago
புதுச்சேரி: இடையன்சாவடி வர்ணமுத்து கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. வானுார் வட்டம் இடையன்சாவடி கிராமத்தில் வர்ணமுத்து மாரியம்மன் கோவில் மற்றும் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் செடல் மகோற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, அன்று சாகை வார்த்தலும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு விநாயகர், அம்மன் அபிஷேக ஆராதனையும், மாலை 4:00 மணிக்கு சிறப்பு மிளகாய் அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு அலகு சாத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.