உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்!

அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்!

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா துவ ங்கியது. விழாவையொட்டி கடந்த 28ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. நேற்று  காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவை ஸ்ரீபாஞ்சராத்ர ஆக வித்வான் வரதசிங்காச்சாரியார் சுவாமிகள் நடத்தி வைத்தார். வரும்  11ம் தேதி விசாக திருத்தேர் விழாவும், 12ம் தேதி பெரியசாற்று முறை ஆழ்வார்கள் மரியாதையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்  அலுவலர் முருகன், தக்கார் சிவஞானம் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !