ஆலங்குடி குருபகவான்கோவில் வளாகத்தில் ஆழ்துளை குழாய் அமைப்பு!
ADDED :4245 days ago
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான்கோவில் வளாகத்தில் எட்டு இடங்களில் மழை நீர் சேகரிப்பு குழாய் அமைக்கப் பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் வரலாற்று சிற ப்புமிக்க குருபகவான்கோவில் உள்ளது. இக்கோவிலில் மழை நீர் சேகரி க் கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க திட்டமிடப்பட்டது. அதன் படி கோவில் வளாகத்தில் எட்டு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை செயல் அலுவலர் சிவராம்குமார் துவக்கி வைத்தார்.