காரைக்கால் காக்கா தோப்பு தர்காவின் சந்தனக்கூடு ஊர்வலம்!
ADDED :4243 days ago
காரைக்கால்: காரைக்கால் காக்கா தோப்பு தர்காவின் கந்தூரி சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. காரைக்கால் காக்கா தோப்பு தர்கா ஹழ்ரத் குல்முஹம்மது சாஹிப் வலிய்யுல்லாஹ் ஹழ்ரத் ஞானி சாஹிப் வலிய்யுல்லாஹ் தர்காவின் வருடாந்திர கந்தூரி சந்தனக்கூடு ஊர்வல நேற்று நடந்தது. வருடாந்திர கந்தூரி விழா நேற்று இரதம் கொடி ஊர்வலம் மற்றும் இரவு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.வருகிற 12ம்தேதி அதிகாலை சந்தனம் பூசுதல்,16ம்÷ ததி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏற்பாடுகளை கந்தூரி விழாக்குழுவினர்கள் மற்றும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.