திரவுபதியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் கோவில் யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. இன்று காலை கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவில் சீரமைப்பு பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. கோவில் முன் மண்டபம், ’டைல்ஸ்’ பதித்தல், வர்ணம் தீட்டுதல் என, மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம மக்கள் பங்களிப்புடன் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று (ஜூன் 4) காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பிரவேச பலி பூஜை நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜை துவங்கியது. நாளை (ஜூன் 5) அக்னி வசந்த உற்சவத்திற்கான கொடியேற்றம் நடைபெறும். வரும் 12ம் தேதி, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியும், அன்று துவங்கி தினசரி இரவு மகாபாரத தெருக்கூத்து நடத்தப்படுகிறது. 22ம் தேதி காலை, துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடக்கிறது. 23ம் தேதி தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.