கண்டமத்தான் கிராமத்தில் தேர் திருவிழா!
ADDED :4146 days ago
திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த கண்டமத்தான் கிராமத்தில் ஐயனார், மாரியம்மன், செல்லியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. ராமநத்தம் அடுத்த கண்டமத்தான் கிராமத்தில் ஐயனார், மாரியம்மன், செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் தேர் திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், ஐயனார், மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகள் ஏற்றப்பட்டு திரு வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.