பள்ளி கொண்ட பெருமாள் பிரதிஷ்டை விழா
ADDED :4148 days ago
திண்டிவனம்: கூட்டேரிப்பட்டில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் காலை நடந்தது. திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலுக்கு பின்புறம் ரங்கநாயகி சமேத பள்ளிகொண்ட பெருமாள் கோவில் அமைக்கபட்டுள்ளது. அதில் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. 1ம் தேதி மாலை 6 மணிக்கு அக்னி குண்டம் அமைத்து பூஜைகள் நடந்தது. நேற்று முன் தினம் அதி காலை பூஜை பூர்ணாஹூதி முடிந்து, கெடி பந்தனமும் நடந்தது. முன்னதாக சிலை பல்வேறு ஊர்களில் கரிக்கோலம் நடத்தபட்டது. பூஜைகளை கேரள மாநிலம் பாலக்காடு சீனுவாச பட்டாச்சாரி, பாலாஜி பட்டாச்சாரி தலைமையில் குழுவினர் செய்தனர். திண்டிவனம் நம்மாழ்வார் சபையினர் பஜனை பாடல்களை பாடினர். விழா ஏற்பாடுகளை கூட்டேரிபட்டை சேர்ந்த நிர்வாகிகள் ரங்கநாதன், ஜெயராமன், லிங்கம் உள்பட விழா குழுவினர் செய்திருந்தனர்.