உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா

கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா

ஆர்.கே.பேட்டை : கங்கையம்மன் ஜாத்திரையை ஒட்டி, சக்தியம்மனுக்கு நேற்று, பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி தோப்பில் சக்தியம்மன் கோவில் உள்ளது. கங்கையம்மன் ஜாத்திரையை ஒட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கூழ் வார்க்கப்பட்டது. மாலையில், கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 7:00 மணியளவில் மாவிளக்கு தீபம் ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !