உத்தமர் கோவிலில் ஜூன் 10ல் தேரோட்டம்
ADDED :4147 days ago
திருச்சி: உத்தமர் கோவிலில், வைகாசி தேர்த்திருவிழா, நேற்று கொடி யேற்றத்துடன் துவங்கியது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பிச்சாண்டார் கோவில் கிராமத்தில், 108 திவ்ய தேசங்களில், ஐந்தாவது தேச ஸ்லமான உத்தமர் கோவில் உள்ளது. வைகாசி தேர்த்திருவிழா நேற்று காலை, 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் நாள்தோறும் இரவு, 7.30 மணிக்கு, பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி புறப்பாடும், வரும், 8ம் தேதி காலை, 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 9ம் தேதி காலை, 10 மணிக்கு பிச்சாண்டேஸ் வரர் திருவீதி உலாவும் நடக்கிறது. 10ம் தேதி காலை, 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.