விக்கிரவாண்டி கங்கையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :4146 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷன் தெருவில் அமைந்துள்ள கங்கையம்மன் சப்த மாதா கோவில் கிராம மக்களால் புணரமைத்து கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. இரண்டு கால யாக பூஜைகள் நடந்து நாளை காலை 7.30 மணிக்கு கலச புறப்பாடு நடந்து 8 மணிக்கு கலசத்திற்கு விக்கிரவாண்டி ரவிச்சந்திர குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரங்கா ரெட்டியார், ஸ்பதி சுப்பிரமணியன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.