உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம்: ந.புதூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் ஊராட்சி ந.புதூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தது. 1ம் தேதி மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு இரண்டாம் கால பூஜைகள் முடிந்தது. காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜைகளை யோக விநாயகர் அர்ச்சகர் நாகராஜ் , முருக்கேரி சீனுவாசன், புதுச்சேரி மகாலட்சுமி கோவில் ஜெகநாதன் குழுவினர் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஊராட்சி தலைவர் இளங்கோ, பூங்காவனம் , ஸ்தபதி திண்டிவனம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !