பாஞ்சாலி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :4146 days ago
அரும்பாக்கம் : அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, பாஞ்சாலி அம்மன் கோவில், 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ள, அந்த கோவிலில் நாளை (5ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.மறுநாள், உத்தனாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து, 1008 பால்குடங்கள் ஊர்வலமாக வந்து, பால் அபிஷேகம் நடக்கிறது. வரும், 7ம் தேதி அன்னதானம் நடைபெற உள்ளது. வரும், 8ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா வாணவேடிக்கையுடன் நடக்க உள்ளது.